முகமே தெரியாம ஓட்டு போட்டா இப்படித்தான்.. பாவம்! தவெக-வை வச்சு பங்கம் செய்த டி. ஜெயக்குமார்…!

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் ஆங்காங்கே நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையைக் குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தவெகவை கடுமையாகக் கலாய்த்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அண்மையில் நடந்த தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இந்த விமர்சனம் வந்துள்ளது.

ஜெயக்குமார் தனது பதிவில், “தொடர் மின்வெட்டு காரணமாக ஒரு கூட்டம் திரண்டு எம்.எல்.ஏ வீட்டிற்குச் சென்று சத்தம் போட்டுள்ளனர். அப்போது ஒரு நபர் வெளியே வந்து, எம்.எல்.ஏ ஊரில் இல்லை என்று கூறியதும் மக்கள் கலைந்து சென்றுவிட்டனர். ஆனால், வெளியே வந்து பொய் சொல்லிவிட்டுச் சென்றவர்தான் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ என்பது அங்கிருந்த மக்களுக்குத் தெரியவில்லை; வேட்பாளரின் முகத்தைப் பார்த்து ஓட்டுப் போட்டிருந்தால் தானே தெரிந்திருக்கும், பாவம்!” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்றிருந்தாலும், பல தொகுதிகளில் மக்கள் வேட்பாளர்களின் விபரங்களோ அல்லது பெயரோ தெரியாமல், விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மட்டுமே வாக்களித்தனர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. ராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்த ஜெயக்குமார், தவெகவினர் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்றும், மக்கள் வேட்பாளர்களை அடையாளம் தெரியாமல் வாக்களித்துவிட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டும் விதமாகவே இந்த நையாண்டிப் பதிவை வெளியிட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Swetha

Recent Posts

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

9 seconds ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

12 minutes ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

34 minutes ago

“2 மணி நேர இருள்.. அலறிய ICU நோயாளிகள்..! அதிரடி உத்தரவிட்ட மின்வாரியம்…!”

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…

37 minutes ago

அட கடவுளே..! நாட்டை உலுக்கும் கோடை வெயில்.. ஒரே நாளில் 40 பேரை பலிவாங்கிய ஹீட்ஸ்ட்ரோக்.. வானிலை மையம் அவசர எச்சரிக்கை…!

இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட…

46 minutes ago

முதுகில் சவாரி செய்துவிட்டு, முதுகிலே குத்திவிட்டார்கள்..! காங்கிரஸை இனி சேர்க்கவே கூடாது.. அண்ணா அறிவாலயத்தில் கொதித்த உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும்,…

46 minutes ago