2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கண்டித்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர். தொடர் தேர்தல் தோல்விகளால் “கட்சியில் மாற்றம் தேவை” என்ற குரல்கள் ஒலித்த பின்னணியில், இந்த அதிருப்தி அணியின் திடீர் எழுச்சி அதிமுக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி இந்த அதிருப்தி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இது அதிமுகவின் பிளவை பகிரங்கப்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட 25 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈபிஎஸ் தரப்பும், அதற்குப் பதிலடியாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலுமணி தரப்பும் சபாநாயகரிடம் மனுக்களை அளித்தன. இதனால் இரு தரப்பிற்கும் இடையிலான மோதல் நீதிமன்றம் மற்றும் சபாநாயகர் அரங்கம் வரை நீளும் சூழல் உருவானது.
தவெக அரசை ஆதரித்ததன் பின்னணியில், புதிய அமைச்சரவையில் தங்களுக்குக் குறைந்தபட்சம் 4 அல்லது 5 அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு அதிருப்தி அணியினரிடம் இருந்தது. இதற்காக முதல்வர் விஜய், சி.வி.சண்முகத்தின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று சில எம்.எல்.ஏக்களை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது. ஆனால், சமீபத்தில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படாததால், அவர்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
அமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில், வேலுமணி தரப்பைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் சைலன்டாக மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குத் தாவியுள்ளனர். இதனால் ஆரம்பத்தில் 25 பேராக இருந்த அதிருப்தி அணியின் பலம் தற்போது 17 ஆகக் குறைந்துள்ளது. மீண்டும் தாய்க்கழகம் திரும்பிய எம்.எல்.ஏக்கள், தாங்கள் இழந்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை மீண்டும் கேட்டபோது, “கட்சியில் இணையலாம், ஆனால் பதவிகள் தர முடியாது” என எடப்பாடி பழனிசாமி கறாராகக் கூறிவிட்டார். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இங்கும் அங்கும் செல்ல முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து வருகின்றனர்.
லீமா ரோஸ் மீதான குற்றச்சாட்டும் சி.வி.சண்முகத்தின் அடுத்த மூவும்: இந்த ஒட்டுமொத்த குழப்பங்களுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் லால்குடி எம்.எல்.ஏவுமான லீமா ரோஸ் தான் காரணம் என அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். தவெகவுக்கு ஆதரவளித்தால் அமைச்சர் பதவி மற்றும் பணத்தாசை காட்டி அவரே பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சி.வி.சண்முகம் மட்டும் இன்னும் பின்வாங்காமல், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டது போல பொதுக்குழுவைக் கூட்டி ஈபிஎஸின் பதவியைப் பறிக்கக் காய் நகர்த்தி வருகிறார். அதற்குப் போட்டியாகப் பொதுக்குழுவைக் கூட்ட ஈபிஎஸ் தரப்பும் தயாராகி வருவதால், அதிமுகவில் அடுத்த சில வாரங்களில் அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறக் காத்திருக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…
இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட…
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும்,…
தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து, அவருடைய தமிழக வெற்றிக்…
பாமகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அண்மையில்…