இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? இந்த அறிகுறிகளே எச்சரித்து விடும்… அதனால் ரொம்பவும் உஷாரா இருங்க!

By Elango on தை 2, 2026

Spread the love

நமது உடலில் இதயம் மிகவும் முக்கியமான ராஜ உறுப்பாக உள்ளது. இதயத்தை நல்ல முறையில் பராமரித்து பாதுகாத்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். அதே நேரத்தில் சில எச்சரிக்கை அறிகுறிகள் இதயத்தில் பிரச்சனை இருப்பதை காட்டி கொடுத்து விடும். அதுகுறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரத்தக்குழாய் அடைப்பு

   

நெஞ்சு வலி அல்லது அழுத்தம் – நெஞ்சுப்பகுதியில் அடிக்கடி வலி, பாரம் அல்லது அழுத்தம் தொடர்ந்து இருந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது.

   

தலைசுற்றல் அல்லது மயக்கம் – அடிக்கடி தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்பட்டால் அதற்கு மூளைக்கு போதுமான ரத்தம் கிடைக்கவில்லை என்று அர்த்தம். மூளைக்கு தேவையான அளவு ரத்தம் செலுத்தாமல் இருந்தால், ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு தான் இதற்கு காரணம்.

 

கைகள், கழுத்து அல்லது தாடையில் வலி – நெஞ்சுப்பகுதியில் மட்டும் இன்றி அந்த வலி அப்படியே கைகள் கழுத்து தாடை போன்ற பகுதிகளில் பரவினால் இதை உடனடியாக கவனிக்க வேண்டும். இது பெரும்பாலும் தமனிகளில் அடைப்பு இருந்தால் மட்டுமே நடக்கும்.

மூச்சு விடுவதில் சிரமம் – லேசாக அல்லது சிறுவேலை செய்தாலும் அல்லது ஓய்வு நிலையில் இருக்கும்போதும் மூச்சு விடும் சிரமம் ஏற்பட்டால் தமனிகளில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது. இப்படி அடிக்கடி மூச்சு திணறலை சந்திக்கும் போது சுவாசிக்க மிகவும் கஷ்டமாக இருந்தால் இதயத்தில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.