நாடு முழுவதும் நாளை முடங்குகிறது…. உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 30, 2025

Spread the love

புத்தாண்டை வரவேற்பதற்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில் உணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 31ஆம் தேதி நாளை நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஆன்லைன் டெலிவரி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஸ்விக்கி, zomato, உள்ளிட்ட உடனடி டெலிவரி சேவைகள் அனைத்தும் முழுமையாக அல்லது பகுதி அளவில் நிறுத்தப்படலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனால் வீட்டிலேயே பார்ட்டி நடத்த திட்டமிட்டுள்ள பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் தான் இதற்கு காரணம். டிசம்பர் 25ஆம் தேதி ஒரு கட்டமாக போராட்டம் நடைபெற்ற நிலையில் நாளை இதை மேலும் தீவிர படுத்த திட்டமிட்டுள்ளனர். ஸ்விக்கி, சோமாட்டோ, செப்டோ, பிளிங்கிட், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள், தங்களின் வேலைச் சூழல் மற்றும் ஊதிய முறைகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ள நிலையில் இந்த நிறுவனங்களின் டெலிவரி சேவை முடங்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை இன்றே ஆர்டர் செய்து வாங்கி கொள்வது நல்லது.