நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி(90) எலமகாராவில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆன விஸ்வநாதன் நாயரின் மனைவி. சாந்தகுமாரி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்து இன்று மதியம் அவருடைய உயிர் பிரிந்தது. இவருடைய இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ள நிலையில் தன்னுடைய தாயார் மறைவால் வாடும் மோகன் லாலுக்கு பலரும் மாறுதல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிகிறது.
