“யார் மிரட்டினாலும் வீடியோவை நீக்கமாட்டேன்” ஸ்விக்கி ஊழியர் ரயில் விபத்து… ஆதாரத்தை அழிக்க சதி..?… மர்ம நபர்களின் மிரட்டலுக்கு யூடியூபர் பதிலடி…!!

By Soundarya on தை 13, 2026

Spread the love

ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவை நீக்குமாறு மர்ம நபர்கள் தன்னை வற்புறுத்துவதாகவும், ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அந்த ஆதாரத்தை நீக்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யார் அழுத்தம் கொடுத்தாலும் அல்லது ஆசை காட்டினாலும் எனது முடிவில் மாற்றமில்லை என்று கூறியுள்ள பிஜய், வீடியோவை நீக்கச் சொன்ன நபர் அல்லது அமைப்பின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இதனால் அந்த வீடியோவை மறைக்க முயற்சிப்பது யார் என்ற மர்மம் நீடிக்கும் நிலையில், இந்த விவகாரம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

   
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு விவாதத்தை கிளப்பியுள்ளது. பலரும் பிஜய்யின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து, இதுபோன்ற முக்கிய ஆதாரங்களை நீக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.