“இது நல்லதல்ல” இந்தியாவுக்கே அவமானம்… “கேட்வே “அருகே கடலில் குப்பைகளைக் கொட்டிய நபர்… வீடியோ எடுத்து வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி…!!

By Soundarya on தை 13, 2026

Spread the love
மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கேட்வே ஆஃப் இந்தியா’ அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அங்குள்ள பாதுகாப்புச் சுவரில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், இந்தச் செயலைத் தனது கேமராவில் பதிவு செய்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

<

/div>

அந்த வீடியோவில், ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் பெண் மற்றும் குழந்தையுடன் அங்கு வந்து, தான் கொண்டு வந்த பையிலிருந்த வீட்டுக் கழிவுகளை எவ்விதத் தயக்கமும் இன்றி நேரடியாகக் கடலில் கொட்டுகிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வெளிநாட்டுப் பயணி, “இது நல்லதல்ல” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். பொது இடங்களில் நிலவ வேண்டிய அடிப்படைச் சமூகப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வம் குறித்தப் புதிய விவாதங்களை இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.