அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் ஹிட் ஆனது. லப்பர் பந்து திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தினேஷின் மனைவியாக லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகை சுவாசிகா நடித்துள்ளார். அவரது நடிப்பு அருமையாக இருக்கிறதாம். சுவாசிகா மலையாள நடிகை ஆவார். தமிழில் வைகை படம் மூலமாக சுவாசிகா என்ட்ரி கொடுத்தார். கோரிப்பாளையம், சாட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் லப்பர் பந்து படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கூறியதாவது, சுவாசிகா நல்லாதான் நடிச்சீங்க. சொல்லக்கூடாதுன்னு இல்ல. நம்ம எல்லாரும் சேர்ந்துதானே வேலை பார்த்தோம் நான் சொல்லனும்னு அவசியம் இல்ல. ஆடியன்ஸ் சொல்லணும். அதுக்கப்புறம் நம்ம கரெக்டா தான் பண்ணி இருக்கோம் அப்படின்னு எனக்கு தெரிஞ்சது. மத்தபடி சொல்ல கூடாதுன்னு இல்ல. ஏன்னா செட்டே சொல்லிவிட்டது. நீங்கள் நடிக்கும் போது வேடிக்கை பார்க்க வந்த என் மனைவி கூட என் தலைவி தாண்டா இந்த படம் அப்படின்னு சொல்லுவாங்க.
![]()
நீங்க ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க. நீங்க ஒரு ஹீரோயின் ஆனா இன்னொரு ஹீரோயினுக்கு அம்மா. அவங்க வந்து என்கிட்ட கதை ஜூம் கால்ல கேட்டாங்க. நான் ஃபர்ஸ்ட் கதை சொன்னேன். அவங்களோட எண்ணம் எப்படி இருந்துச்சுன்னா தமிழ் சினிமால நல்ல வரணும் சார். இப்போ அவங்க எப்படி எமோஷனலா பேசினாங்களோ அதை அப்படியே என்கிட்ட சொன்னாங்க. இவங்க கிட்ட கதையை சொல்லலாமா வேண்டாமான்னு முதல்ல யோசிச்சேன். அதுக்கப்புறம் தான் சொல்லலாம்னு முடிவு எடுத்து கதையை சொன்னேன்.

அவங்க கதையை சொல்லி முடித்த உடனே ஓகே சொல்லிட்டாங்க அவங்க என்கிட்ட சொன்னது ஒரே விஷயம் தான் சார் எனக்கு எந்த லாங்குவேஜ் பண்ணாலும் தமிழ்ல ரீ என்ட்ரி கிடைக்கணும். எனக்கு தமிழ்ல நல்ல பெயர் வாங்கணும். உங்களை நம்பி தான் நான் இந்த படத்துல நடிக்கிறேன் அப்படின்னு சொன்னாங்க என தமிழரசன் பச்சமுத்து கூறியுள்ளார். மேலும் அவங்க ஹேப்பின்னா நானும் ரொம்ப ஹாப்பி தான். அசோதைக்கும் தினேஷ் அண்ணா ரெண்டு பேருமே ஒரே காலகட்டத்தில் தான் இருந்தாங்க. அவங்களுக்கு ஏதோ ஒன்னு தேவை. அது கிடைக்காமல் சுத்திட்டு இருந்தாங்க. அது இந்த படத்தின் மூலமா கிடைச்சத அவங்க நம்பினார்கள் என்றால் நான் ரொம்ப ஹேப்பியா இருப்பேன் என இயக்குனர் கூறியுள்ளார். அதனை கேட்டு ச்வாசிகா கண்கலங்கினார்.
