பிரபல வில்லன் நடிகரான ராகுல் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் விஜயகாந்த் நடிப்பில் ரிலீசான நரசிம்மா திரைப்படத்தின் மூலம் ராகுல் அறிமுகமானார்.
இதனை அடுத்து பரசுராம், மழை, ஆதவன், ஜெய்ஹிந்த் 2, வேதாளம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1998- ஆம் ஆண்டு ராகுல் தேவ் ரீனா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு சித்தார்த் என்ற மகன் உள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரீனா சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் கடந்த 2009 ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மனைவியின் மறைவிற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் தனது மகன் சித்தார்த்தை தனியாக நின்று வளர்த்து வருவதாக கண்ணீரோடு பேசினார். எனது மகனுக்கு நான் அம்மாவாகவும், அப்பாவாகவும் இருக்க வேண்டும் என முயற்சி செய்கிறேன். பல நேரங்களில் அது தோற்றுப் போய் விடுகிறது என கண்கலங்கி அவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
வேதாளம் திரைப்படத்தில் கம்பீரமாக இருந்த ராகுல் தேவ் தற்போது ஒல்லியாகி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். விமான நிலையத்தில் வைத்து ராகுல் தேவ் தனது மகனை சந்தித்து கட்டி அணைத்தார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதனை பார்த்து ரசிகர்கள் வேதாளம் படத்தில் கம்பீரமாக நடித்த ராகுலா இது என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram