சென்னையில் மழைவெள்ளம் குறித்து சுவாமி நித்தியானந்தா பேசிய வீடியோ வைரல் – உண்மையை இப்படி புட்டு புட்டு வெச்சுட்டாரே?

By admin on மார்கழி 6, 2023

Spread the love

ஆன்மிக உலகில் மிக பிரபலமான சொற்பொழிவாளரான சுவாமி நித்தியானந்தா, தொண்டர்கள் மத்தியில் பேசிய ஒரு வீடியோ, இப்போது வைரலாகி வருகிறது. அது அவர் இப்போது பேசியதா, எப்போதோ முன்பு பேசியதா எனத் தெரியாத நிலையிலும், அவர் பேசிய அந்த வீடியோவில் உண்மை மட்டுமே இருக்கிறது. சுவாமி நித்தியானந்தா பேசியதாவது, பேஸ்புக்கில் ஒரு மீம்ஸ் ஒன்ணு பார்த்தேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னாடி, அப்ப இருந்த சீப் மினிஸ்டர் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு மழைவெள்ளத்தை வந்து பார்வையிடுகிறார். அதுக்கு அப்புறம் வந்த சீப் மினிஸ்டர் அவரும் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு வெள்ளத்தை பார்க்கிற மாதிரி. இப்படி வேற வேற முதலமைச்சர்கள் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு சென்னை வெள்ளத்தை பார்த்துக்கிட்டு இருக்காங்க. அப்படீன்னா, சென்னை வெள்ளம் வந்துக்கிட்டுதான் இருக்கு. எத்தனை முதல்வர்கள் வந்துபோனாலும் அந்த பிரச்னை முடியவில்லை.

   

Nithyananda

   

இதுல உண்மையான பிரச்னை என்னவென்றால், தண்ணியோட வீட்டில் நாம வீடு கட்டியதால், நம்ம வீட்டில் தண்ணீர் வீடு கட்டுது, அவ்வளவுதான். சரியான முறையில் பிரச்னை தீர்க்கப்படவில்லை. நமக்கு என்ன திருப்தி என்றால், பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வந்து பார்த்தார்கள். நமது கவனம் திசை திருப்பப்படுகிறது. இவ்வளவு பேர் வந்து வெள்ளத்தை பார்வையிட்டுட்டு போயிருக்காங்க. இத்தனை வருட காலமாக இந்த பிரச்னையின் அடிப்படையை நாம் புரிந்துக்கொள்ளவில்லை. அல்லது மாற்ற முடியாத நிலையில் பிரச்னை இருக்கிறது. அல்லது பிரச்னை மிகவும் முற்றிப்போய்விட்டது. அதாவது இதுக்கு மேல இவ்வளவு பேரையும் காலி பண்ண முடியாது. நிறைய பேர் அங்கு வாழ ஆரம்பித்து விட்டனர். சட்டத்தால், வேறு ஏதனாலோ இவர்களை காலி செய்வது சாத்தியமில்லை.

 

Nithyananda

அப்போது என்னவென்றால், மழை அடிக்கிற மாதிரி அடிக்கும். நாம அழவுற மாதிரி அழவணும். நிவாரண உதவி நடக்கற மாதிரி நடக்கும். திரும்ப அடுத்த மழை வர்றபோது, இதே மாதிரி மழை அடிக்கிற மாதிரி அடிக்கும். அழுவுற மாதிரி அழவணும். திரும்பவும் நிவாரண உதவி நடக்கற மாதிரி நடக்கும். அவ்வளவுதான். இயற்கையோடு நமது தொடர்பை இழந்துவிட்டோம். வாழ்க்கை மிகப் பெரியது, என்று பேசி இருக்கிறார் நித்தியானந்தா. அதாவது, சென்னையில் மழைவெள்ளம் என்பது தீர்க்க முடியாத ஒரு பிரச்னையாக இதுவரை இருந்திருக்கிறது. இனிமேலும் இருக்க போகிறது. எத்தனை முதலமைச்சர்கள் மாறினாலும், இந்த பிரச்னை மாறப் போவது இல்லை. இதை பேசி பேசி அரசியலாக்குவதோ, அல்லது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக்குவதோ எந்த பயனும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார் சுவாமி நித்தியானந்தா. இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது சென்னையில் அதே சூழல் இருப்பதால் இந்த விடியோவை நெட்டிசன்களை ஷேர் செய்து வருகின்றனர்.