திடீர் திருப்பம்… சற்றுமுன் இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த தேமுதிக… பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 25, 2025

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் சந்தித்தபோது தலைமை கழக நிலையை செயலாளர் பார்த்தசாரதியும் உடன் இருந்தார். ஜனவரி 28ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதற்கான குருபூஜையில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி அழைப்பிதழை சுதீஷ் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார்.

அதிமுகவுக்கு முதல் அழைப்பு விடுத்த தேமுதிக!

   

டிசம்பர் 28ஆம் தேதி குருபூஜை நடப்பதை முன்னிட்டு முதல் ஆளாக இபிஎஸ் இன் வீட்டுக்கே சென்று அழைப்பு விடுத்துள்ளார் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழை எடப்பாடி பழனிச்சாமி இடம் அளித்தோம். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிக அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த சந்திப்பு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.