வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் சுசீந்திரன். முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு உருவான இந்த படம் வலுவான கதை காரணமாக வெற்றி பெற்றது. இதனால் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கி வெற்றி கண்டுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் எடுத்த படங்கள் எல்லாம் தோல்வி படங்களாக அமைந்தன. தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக அவர் வெற்றிப்படமே கொடுக்கவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் விஜய் ஆண்டனி இயக்கத்தில் ‘வள்ளிமயில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு இடையில் மீண்டும் புதுமுகங்களை வைத்து ‘2கே லவ் ஸ்டோரி’ என்ற படத்தையும் இயக்கி ரிலீஸ் செய்துள்ளார். அந்த படமும் அவரின் தோல்விப் படங்களின் லிஸ்ட்டில் இணைந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தான் இயக்கி சூப்பர் ப்ளாப் ஆன ‘ராஜபாட்டை’ படம் பற்றி பேசியுள்ளார். அதில் “ராஜபாட்டை படம் ஷூட்டிங் தொடங்கி 10 நாட்களிலேயே இந்த படம் ஓடாது என தெரிஞ்சிடுச்சு. நான் தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர் ‘ஏற்கனவே செல்வராகவனை வைத்து ஒரு படம் எடுத்து அது பாதியில் நின்று பலகோடி ரூபாய் நஷ்டம் சார். இதை எப்படியாவது முடித்துக் கொடுங்கள்” என்றார்.
வேறு வழியில்லாமல் எதாவது மேஜிக் நடக்காதா என எடுத்த படம்தான் அது. அந்த படத்தில் பல தவறுகள் நடந்தன. அதில் என்னுடைய தவறும் முக்கியமானது.” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…
புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…