“பாசக்கார பயபுள்ளைங்க” பயிற்சியாளர் காலில் விழுந்த சூர்யகுமார்… இந்திய அணியின் டிரெஸிங் ரூம் பாசம் மைதானத்தில் அம்பலம்…!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டிக்கு பிறகு மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் த்ரோ-டவுன் (Throw-down) நிபுணர் ரகுவின் கால்களைத் தொட்டு வணங்கினார். சூர்யகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு ரகுவின் கடுமையான உழைப்பு முக்கியப் பங்கு வகித்த நிலையில், தனது நன்றியை சூர்யா இவ்வாறு வெளிப்படுத்தியது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. 

அதேபோல், நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷனை, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் மூத்த வீரர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஓடிச் சென்று ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவும் இஷானின் ஆட்டத்தைப் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மைதானத்தில் நிலவிய இந்த வீரர்களின் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் “சிறந்த வீடியோவாக” ட்ரெண்டாகி வருகின்றன.