வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சூர்யா கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு வீடியோ மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த சூர்யா நேரடியாக கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து பத்து நிமிடம் சமாதியில் அமைதியாக உட்கார்ந்து மௌன அஞ்சலி செலுத்தினார். அப்போது சூர்யா கேப்டன் விஜயகாந்தை நினைத்து தேம்பி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து ‘பெரியண்ணா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும் அந்த படம் சூர்யாவிற்கு திரைப்படத்துறையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று கூறினார். இந்த படத்தின் மூலம் இருவருக்கிடையே அன்பு பரிமாற்றம் நடைபெற்றது.

கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளாதது அவருக்கு பெரும் இழப்பாக உள்ளது என மன வருத்தத்துடன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார். மேலும் அவர் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சூர்யா அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் மறைந்தாலும் எப்போதும் அவரின் நினைவு இருக்கும் ! கேப்டன் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்றும் கூறினார். மேலும் கேப்டன் விஜயகாந்த் மறைந்த நாளில் அவரின் அழகான பதிவுகளையும் நினைவுகளையும் வெளியிட்ட ஊடகத்திற்கு நன்றியும் தெரிவித்தார் நடிகர் சூர்யா.
