பிரபல நடிகரான சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். அவரின் வித்தியாசமான மாடுலேஷனும் உடல்மொழியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அதையடுத்து அவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார். இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அஜித்தை வைத்து ‘ரெட்’ மற்றும் சூர்யாவை வைத்து ‘மாயாவி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஓடாததால் அவர் நடிப்புப் பக்கம் தன்னை மடைமாற்றிக் கொண்டார்.
தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் சிங்கம் புலி சமீபத்தில் ரிலீஸாகியுள்ள ‘மகாராஜா’ திரைப்படத்தில் பெண் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒருவராக நடித்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இதுவரை அவரைப் பற்றி இருந்த காமெடியான வெகுளி இமேஜை இந்த கதாபாத்திரம் மொத்தமாக உடைத்துள்ளது. இதையடுத்து அவரை நோக்கி இப்போது விதவிதமானக் கதாபாத்திரங்கள் வரத் தொடங்கியுள்ளன.அப்படி ஒரு வித்தியாசமானக் கதாபாத்திரத்தில் சிங்கம்புலி நடித்துள்ளார்.
சிங்கம்புலி பற்றி பலரும் அறியாதத் தகவல். அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை இயக்குனராகத் தொடங்கியவர் என்பதுதான். அவர் அஜித்தை வைத்து ‘ரெட்’ மற்றும் சூர்யாவை வைத்து ‘மாயாவி’ ஆகிய படங்களை இயக்கியவர். ஆனால் இந்த படங்களுமே வணிக ரீதியாக வெற்றி பெறாததால் அவர் அடுத்தடுத்து படங்கள் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ‘மாயாவி’ படம் பற்றி ஒரு சுவாரஸ்யமானத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “இந்த படத்துக்கு நான் வைத்த டைட்டில் ‘கூண்டுக்கிளி’ என்பதுதான். இது சிவாஜியும் எம் ஜி ஆரும் இணைந்து நடித்த ஒரே படம். ஆனால் இந்த படம் ஓடவில்லை. அதனால் அந்த டைட்டில் வேண்டாம் என்று எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் சொன்னார். அதனால்தான் நாங்கள் அதன்பிறகு ‘மாயாவி’ என்று டைட்டிலை மாற்றினோம்.” எனக் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…