“அதிகாலையிலேயே அதிரடி ரெய்ட்!… கிலோ கணக்கில் குட்கா, கஞ்சா பறிமுதல்… கோவையில் 400 போலீசார் வேட்டை – ஸ்தம்பித்த விடுதிகள்…!!”

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த வாக்குறுதியைச் செயல்படுத்தும் விதமாக, காவல்துறையில் ‘போதை தடுப்புச் சட்டம்’ என்ற தனிப் பிரிவு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காவல்துறையினர் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு, போதைப்பொருள் புழக்கத்தில் தொடர்புடைய பலரைக் கைது செய்து வருகின்றனர்.

இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவையில் இன்று அதிகாலை முதலே போதைப்பொருள் தடுப்புக்கான பிரம்மாண்ட சோதனை நடத்தப்பட்டது. கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் ஆகிய பகுதிகளில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் நேரடித் தலைமையில் இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் விடுதிகளை இலக்காகக் கொண்டு இந்தத் தேடுதல் வேட்டை திட்டமிடப்பட்டது.

   

கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த மாபெரும் சோதனையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். விடுதிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களில் நடத்தப்பட்ட தீவிர தேடுதலின் முடிவில், கிலோ கணக்கிலான குட்கா, கஞ்சா மற்றும் மிக வீரியமிக்க ‘மெத்தம்பேட்டமைன்’ போன்ற போதைப்பொருட்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.