தன்னுடன் வேலை பார்த்தவர்களுக்கு வேலையை விட்டு செல்லும் நாளில் சொன்ன அதிர்ச்சி தகவல்… அவ்ளோ அழுத்தமானவரா சூர்யா?

By vinoth on ஐப்பசி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.

முதலில் சூர்யா நடிக்க, சிவகுமார் ஒத்துக்கொள்ளவில்லையாம். அதே போல சூர்யாவுக்கும் நடிப்பில் ஆர்வம் இல்லையாம். கார்மெண்ட்ஸ் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகதான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாராம். ஆனால் வசந்த இருவரையும் சமாதானப்படுத்தி சூர்யாவை நடிக்கவைத்துள்ளார்.

   

#image_title

   

சரவணன் என்ற பெயரை மாற்றி சூர்யா என பெயர் வைத்து அவரை நடிகராக்கினார். அதன் பொன்னர் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். முதலில் நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் சூர்யா சுமார்தான். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார்.

 

இந்நிலையில் சூர்யா நடிக்க வந்த புதிதில் அவர் எப்படி இருந்தார் என்று நேருக்கு நேர் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய நடிகர் மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “சூர்யா நேருக்கு நேர் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். அவரை வசந்த் சார்தான் உருவாக்கினார். ஆனாலும் அந்த படத்தில் அவரிடம் கூச்சம் இருந்தது. யாரிடமும் அவர் அதிகமாகப் பேச மாட்டார்.

#image_title

வேலை செய்த கம்பெனியில் வேலையை விடுவதாக போய் சொல்லியுள்ளார். அப்போது அவர்கள் ஏன் என்று கேட்க ‘சினிமாவில் நடிக்கப் போகிறேன்’ என சொல்லியுள்ளார். அவர்கள் அதிர்ச்சியாகி உனக்கு சினிமாவில் யாரைத் தெரியும் எனக் கேட்டுள்ளார்கள். அப்போதுதான் நான் சிவகுமாரின் பையன் என்று சொல்லியுள்ளார். அதைக் கேட்டு அவர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இவ்வளவு நாளாக இதை சொல்லவே இல்லையே என ஆச்சர்யப்பட்டுள்ளனர். அந்தளவுக்கு சூர்யா அழுத்தமானவர்” எனப் பேசியுள்ளார்.