விடுதலை படத்தை வைத்து வெற்றிமாறனை லாக் செய்த சூர்யா.. இப்படி ஒரு கண்டிஷன் போட்டுருக்காரா..?

By Nanthini on சித்திரை 29, 2025

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. இந்தத் திரைப்படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் கண்ணாடிப் பூவே மற்றும் கனிமா ஆகிய பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. மேலும் சில படங்கள் நேற்று நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகியது. மேலும் படத்தில் அதிரடியான ட்ரெய்லரும் நேற்று வெளியானது. கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசியாக இதே நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெற்றது.

ரெட்ரோ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்! | Update on the first  single from the film 'Retro'!

   

ஆடியோ லான்ச் டிக்கெட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் வெற்றி விழாவுக்கு அதையே கொண்டு வந்து உள்ளே வரலாம் என்று பேசியது படம் வெளியானதும் பயங்கர ட்ரோல் ஆனது. இந்த நிலையில் ரெட்ரோ படம் கண்டிப்பாக அந்த ட்ரோல்களுக்கு எல்லாம் பதில் அடி கொடுக்கும் என்று தெரிகின்றது.  இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் குறித்த பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தாலும் தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.

   

ஒருவழியா வாடிவாசல் பட அப்டேட் வந்தாச்சு.. இனிமேதான் பாக்க போறீங்க சூர்யா  ஆட்டத்த - Cinemapettai

 

இடையில் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்திலும் சூர்யா கங்குவா திரைப்படத்திலும் பிஸியாகிவிட்டன. இந்தப் படங்களுக்கு பிறகாவது வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ரெட்ரோ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

suriya and vetrimaran vaadivaasal movie latest update

இதனிடையே சூர்யா வெற்றிமாறன் இடம் வாடிவாசல் திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்டையும் கேட்டுள்ளாராம். ஏனென்றால் வெற்றிமாறன் வருடக்கணக்கில் படப்பிடிப்பை இழுத்து அடித்து விடுவார் என்று சூர்யா பயப்படுகிறாராம். ஆதலால் முழு ஸ்கிரிப்ட்டையும் சூர்யா கேட்டுள்ள நிலையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடிக்கலாம் என பிளான் செய்துள்ளார். ஏற்கனவே விடுதலை படத்தை வருட கணக்கில் வெற்றிமாறன் இழுத்தடித்ததை அறிந்து கொண்ட சூர்யா எச்சரிக்கையாக முன்னதாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.