கதையை மாற்ற 30 லட்சம் கொடுப்பதாக கூறிய தயாரிப்பாளர்.. காக்கா முட்டை இயக்குனர் செய்த நெகிழ வைக்கும் செயல்..!

By Nanthini on சித்திரை 29, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எத்தனையோ திரைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படக்கூடிய திரைப்படங்கள் வெகு சில மட்டுமே. அந்த வரிசையில் இடம் பிடித்த திரைப்படம் தான் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து பாக் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்து வெளியிட்ட காக்கா முட்டை திரைப்படம். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதுடன் பல்வேறு வசூல் சாதனைகளையும் செய்தது. எம். மணிகண்டன் இயக்கிய இந்த திரைப்படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

காக்கா முட்டை' வெளியான நாள்: எளிமையின் கொண்டாட்டம் | kakka muttai release  day - hindutamil.in

   

அதேசமயம் இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் நல்ல புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ ஏற்றுக்கொண்டது. ஒரு சிறிய கதைக்களத்தைக் கொண்டு உருவான இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. ஆனால் இந்த திரைப்படம் உருவாவதற்கு முன்பு இயக்குனர் மணிகண்டன் பெரிய சிக்கல்களை எல்லாம் சந்தித்துள்ளார். அதாவது மணிகண்டன் இந்த கதையை சொல்லாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முடிந்த அளவிற்கு அனைவரிடமும் சொல்லிவிட்டார்.

   

காக்கா முட்டை பட இயக்குனர் வீட்டில் திருட்டு - தேசிய விருதுக்கான பதக்கம்  கொள்ளை | Tamil cinema director manikandan's home burglary

 

ஆனால் கதை ரொம்ப சின்னதா இருக்கு குறும்படமாக எடுக்கலாம் என்று கூறி யாருமே இந்த படத்தை எடுக்க முன்வரவில்லை. இறுதியாக ஒரு தயாரிப்பாளர் முன்வந்து படத்தை எடுக்கலாம் என்று கூறிவிட்டு மணிகண்டனுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளார். சரி என்று சம்மதித்த மணிகண்டன் படத்தை எடுப்பதற்கான வேலையை பார்த்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த தயாரிப்பாளர் கதை நல்லா தான் இருக்கு இதுல கொஞ்சம் காதல் கதையை சேர்த்தால் நல்லா இருக்கும் என்று கூறி உனக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் தருகிறேன் கதையை மட்டும் கொஞ்சம் மாற்று என கூறியுள்ளார்.

My Movie Milestone: Aishwarya Rajesh About The Life-Changing Kaaka Muttai

உடனே மணிகண்டன் தன் படத்தின் கதையை கெடுப்பதாக நினைத்து அங்கிருந்து வெளியேறி விட்டார். அதன் பிறகு நல்ல மனசோடு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரிக்க இந்த படம் மணிகண்டன் நினைத்தது போல மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.