சூர்யாவும் இல்ல தனுஷும் இல்ல.. தமிழ் சினிமாவின் புதிய சென்சேஷனை ‘வாடிவாசலில்’ களமிறக்கும் வெற்றிமாறன்..

By Ranjith Kumar on பங்குனி 1, 2024

Spread the love

கடந்த 2022 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி பிரம்மாண்டமான நடிப்பில் வெளியாகி இந்திய ரசிகர்களை சற்று வியக்க வைத்த படம் தான் “விடுதலை”. இப்பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பெரிதளவு இடிவுள்ளது. பல விருதுகளையும் குவித்துள்ளது, முக்கியமாக இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் படம் தேர்வாகி விருது வாங்கியுள்ளது.

இப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்றும் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில், மோஷன் பிக்சர்ஸ் இன்று பல வெளியாகி ரசிகர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது, அதன் பின்னராக படப்பிடிப்பு சிறிது நாள் நிறுத்தி வைக்கப்பட்டது, அப்பொழுது தான் தெரியவந்தது சூர்யா அவர்களுக்கும் படத்தில் சில விஷயங்களில் ஒத்துப் போகாமல் வெளியேறியதனால் படம் நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிந்தது.

   

அந்த சமயத்தில் சூர்யாவும் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்தில் கங்குவா படத்தில் பிசியாக நடித்து வந்ததால் இப்படத்தில் டேட் கொடுக்க முடியாமல் வாடிவாசல் படம் சற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சில பல காரணத்தால் சூர்யா அவர்கள் இப்படத்தில் நடிக்காமல் வெற்றி மாறன் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளாகி, அப்போ சூர்யா இல்லனா வேற யார வச்சு இயக்க உள்ளார்? என்று கேள்விகளைக் கேட்டு வந்தார்கள்.

   

தற்போது வெற்றிமாறன் தரப்பிலிருந்து படத்தின் சூர்யாவுக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார் என்று வெளிப்படுத்தி இருக்கிறார். விடுதலை பாகம் 1,2 மற்றும் ஏழுமலை ஏழு கடல், கருடன் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து பல விருதுகளை அள்ளி குவித்து முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூரி அவர்கள் இப்படத்தில் நடிக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதை கேட்டதும் ஒரு சில ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வரவேற்பு அள்ளி குவித்துள்ளார்கள்.

 

ஆனால் மற்ற சில ரசிகர்கள் சூர்யாவை வைத்து எதிர்பார்த்தது இந்த கதையில் சூரியை நடிக்க வைத்தால் செட் ஆகுமா என்று யோசித்து விமர்சித்து வருகிறார். இப்படம் சூரி நடிப்பில் வெளியாகும் வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும் படம் எப்படி இருக்கும் என்று.