சீனியரை மிஞ்சிய ஜூனியர்.. கருடன் படத்திற்கு சசிக்குமாரை விட பல மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கும் சூரி..! ஆச்சரியத்தில் அதிர்ந்து போன ரசிகர்கள்..!

By Ranjith Kumar on மாசி 28, 2024

Spread the love

சினிமா துறையில் விடுதலை படத்திற்கு பின் ஹீரோவாக கொடிகட்டி பறக்கும் “பரோட்டா சூரி” அவர்கள் சீனியர் நடிகர்களான சசிகுமாரை விட அதிக சம்பளம் வாங்குகிறாராம். தற்போது ஏழு கடல் ஏழுமலை, விடுதலை போன்ற படங்களுக்கு இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்ட் வின்னிங் பெற்றுள்ளது, அதன் பின் இவர் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும் இவர் கதைக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்து நல்ல படங்களை யோசித்து தேர்வு செய்து நடித்து அப்படத்திற்கான விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார், தமிழ் சினிமா இப்பொழுது காமெடி கதாநாயகனாக வெளிவந்து ஹீரோவாக இருக்கும் சூரியை உற்று நோக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு இவர் வளர்ச்சியை பெரிதாக இருக்கிறது. தற்போது “வெற்றிமாறன்” கதையில் “துரை செந்தில்குமார்” அவர்களின் இயக்கத்தில் லார்க் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் கே குமார் தயாரிப்பில் “யுவன் சங்கர் ராஜா” இசை அமைப்பில் சினி போட்டோகிராபர் ஆர் வில்சன் இவர்களின் இயக்கிக் கொண்டிருக்கும் படம் தான் “கருடன்”.

   

தற்போதைய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரியன், சசிகுமார் அவர்களும் நடித்து வருகிறார்கள். இவர் இருவருக்கும் இப்படத்தில் மிக முக்கியமான ரோல் அமைந்திருக்கிறது. இந்த வருடம் கடைசிக்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய படத்தின் சசிகுமார் மற்றும் சூரியன் சம்பளம் பற்றி தான் பல விஷயங்கள் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரின் சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார். கருடன் படத்தில் மூத்த நடிகர் சசிகுமார் அவர்களுக்கு 2 கோடி சம்பளமாம், 

   

ஆனால் இரண்டு படங்கள் மட்டுமே ஹீரோவாக நடித்து தற்போது பிரபல நடிகராக வலம் வரும் சூரி அவர்களுக்கு 8 கோடி வரை இப்படத்தில் சம்பளம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சிரியத்தில் மிதந்துள்ளார்கள். தற்போது வளர்ந்து வந்த சூரிக்கு 8 கோடிக்கு மேல், ஆனால் பல வருடம் காலமாக சினிமாவில் பணிபுரியும் சசிகுமார் அவர்களுக்கு 2 கோடி சம்பளம் தானா என்று ஆச்சரியத்தில் உள்ளார்களாம். இதை தற்போது இணையத்தில் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.