72 வயதிலும் கைவசம் 4 படங்கள் லைன் அப்.. வெளியாகி வைரலாகும் வேட்டையனின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. 73 வயதிலும்  ஹீரோவாக நடித்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘ஜெயிலர்’  திரைப்படம் வசூலில் சாதனையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

   

இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’, ‘தலைவர் 171’,  நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படங்கள் கைவசம் உள்ள நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 72 வயதிலும் கைவசம் அடுத்தடுத்து 4 படங்கள் லைன் அப்பில் வைத்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 170 திரைப்படத்தின்  டைட்டில் கூட அவரது பிறந்த நாளன்று மாஸாக வெளியிடப்பட்டது. ‘வேட்டையன்’ திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த டீசரில் ரஜினி தன் கையில் லத்தியுடன் ‘குறி வைச்சா இரை விழணும்’ என்ற பஞ்ச் டயலாக்கை மாஸாக பேசியிருப்பார்.

போலீஸ் அதிகாரியாக வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், அந்த கெட்டப்புடன் தலைவர் இருந்து இறங்கி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் தற்போது வேட்டையன் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது . இதோ அந்த வீடியோ…