#image_title
முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 23-ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழை திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக வாழை திரைப்படத்திலிருந்து பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்கள் மனதை வென்றது. வாழை திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாழை திரைப்படத்தை பார்த்து இயக்குனர் பாலா, சூரி ஆகியோர் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து தங்களது பாராட்டை தெரிவித்து சென்றனர். ஆரம்பத்தில் இருந்து படத்தின் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது.
இதே போல கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெர்லின் உள்ளிட்ட பல நாடுகளில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது.
வாழை படம் சூப்பர் ஆன நிலையில் கொட்டுக்காளி படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றுள்ளது. வாழை படம் 4 நாட்களில் 12 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் கொட்டுக்காளி படம் 2 கோடி ரூபாய்க்கும் குறைவாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் வாழை படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சூரி கலந்து கொண்டார். இது தொடர்பான போட்டோஸை நடிகை திவ்யா துரைசாமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.
#image_title
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…