துப்பாக்கிச் சூடு இல்லையா?!… முழங்கால் வரை அகற்றப்படும் அபாயம்?… ரோப்டா வழக்கில் கைதான ஹேமந்துக்கு என்னாச்சு?… வெளியிட்ட மர்ம ரிப்போர்ட்…!!

By Gayathri on கார்த்திகை 2, 2026

Spread the love

ரோப்டா தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மல்லேஸ்வரி விளக்கமளித்துள்ளார். அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் கூற்றுப்படி, அவரது கால்களில் துப்பாக்கிக் குண்டுகள் எதுவும் சிக்கியிருக்கவில்லை. மாறாக, தொடைப் பகுதியிலிருந்து பாதம் வரை பலத்த காயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பகுதிகளில் இரத்த ஓட்டம் சரிவர இயங்காததால், முழங்கால் அளவுக்குக் கால்களை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதேசமயம், கால்களைத் தவிர்த்து அவரது உடலின் பிற உறுப்புகள் அனைத்தும் எவ்விதப் பாதிப்பும் இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.