#image_title
தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அப்படி கமல்ஹாசன் தன்னுடைய நடிப்புத் திறமையில் உச்சம் தொட்ட திரைப்படம் என்றால் நாயகன் படத்தை சொல்லலாம். மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் கமர்ஷியலாகவும், விமர்சன ரீதியாகவும் பெருவெற்றி பெற்று கமல்ஹாசனுக்கு இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.
இந்த படத்தில் பாட்ஷா மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட கமர்ஷியல் பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாவை உதவி இயக்குனராகப் பணியாற்ற சொன்னாராம் கமல்ஹாசன். அந்த படத்தில் அவர் சிறப்பாக வேலை செய்ததைப் பார்த்ததைப் பார்த்து கமல்ஹாசன் “இப்போது நீங்கள் ஒரு படத்தை இயக்கத் தயாராகி விட்டீர்களா?” எனக் கேட்டாராம்.
அதற்கு சுரேஷ் கிருஷ்னன் “அப்படிதான் நினைக்கிறேன் சார்” எனக் கூற “அப்படியென்றால் என் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணுங்கள்” எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு மகிழ்ந்த சுரேஷ் கிருஷ்ணா “மகிழ்ச்சி சார், யார் ஹீரோ” எனக் கேட்க “நான்தான்” என சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். அந்த படம்தான் நாயகன் படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ திரைப்படம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…