அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பரீட்சையமானாவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளா திரைப்பட வர்த்தக சபை நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, திரைப்படங்களில் நடிப்பதால் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை என்று கூறினார். என்ன நடந்தாலும் வருகின்ற செப்டம்பர் ஆறாம் தேதி ஒற்றக்கொம்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். அமைச்சர் பதவியை விட்டு தன்னை நீக்கினாலும் கவலை இல்லை.
சினிமா மட்டும் இல்லை என்றால் நான் செத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் பதவியை விட சினிமா தான் தனக்கு முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார். சினிமாவில் நடிக்கும் காரணத்திற்காக அமைச்சர் பதவியை விட்டு தன்னை நீக்கினாலும் எந்த கவலையும் இல்லை என்றும் தான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.