“உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தவறானவை” இது நல்லதுக்கு அல்ல… விபச்சாரம், ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி குற்றச்சாட்டு..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

விபச்சாரம் மற்றும் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கி உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்புகள் “சரியான சட்டங்கள் அல்ல” என்று மத்திய அரசு தற்போது ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அரசியலமைப்பு  (Constitutional Morality) என்ற கருத்தாக்கத்தை இத்தீர்ப்புகள் தவறாகப் பயன்படுத்தியுள்ளன என்றும், இவை மேற்கத்திய நாடுகளின் விழுமியங்களை இந்தியச் சூழலில் திணிப்பது போல அமைந்துள்ளதாகவும் மத்திய அரசு விமர்சித்துள்ளது.

 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு முக்கியத் தீர்ப்புகளை மத்திய அரசு இங்கே சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்று, விபச்சாரம் கிரிமினல் குற்றம் அல்ல என்று அறிவித்த பிரிவு 497 ரத்து; மற்றொன்று, ஒருமித்த கருத்துடன் கூடிய ஓரினச்சேர்க்கையை அனுமதித்த பிரிவு 377 தொடர்பான தீர்ப்பு. இந்தத் தீர்ப்புகள் இந்திய சமூகத்தின் தார்மீக விழுமியங்களையும், திருமண பந்தத்தின் புனிதத்தையும் கணக்கில் கொள்ளவில்லை என்பது மத்திய அரசின் வாதமாக உள்ளது.

   

சட்டங்களை இயற்றுவதும், எவை சமூகத்திற்குத் தேவையானது என்பதைத் தீர்மானிப்பதும் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்று மத்திய அரசு வாதிடுகிறது. நீதிமன்றங்கள் தங்களின் எல்லையைத் தாண்டிச் செயல்படுவதாகவும், இத்தகைய தீர்ப்புகள் சமூகக் கட்டமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு கவலை தெரிவித்துள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த விவகாரத்தை தற்போது பரிசீலித்து வருகிறது.