“கோடிக்கணக்கில் மோசடி..?” சிக்கலில் இயக்குனர் சுந்தர் சி… சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..!!

By Soundarya on சித்திரை 9, 2026

Spread the love

இயக்குனர் சுந்தர் சி மற்றும் அவரது மேலாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை-4’ படத்திற்காகத் தான் சில முதலீடுகளைச் செய்ததாகவும், பட வெளியீட்டிற்குப் பிறகு அதற்கான லாபப் பங்கையும் அசல் தொகையையும் தராமல் சுந்தர் சி மற்றும் அவரது தரப்பினர் தன்னை ஏமாற்றிவிட்டதாக ரவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை கேட்டும் முறையான பதில் கிடைக்காததால், சுமார் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாகக் கூறி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி மீது இத்தகைய பண மோசடி புகார் எழுந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.