அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தில் பெரிய அளவிலான அதிகாரங்கள் இல்லாத ‘மாவட்ட அமைப்புச் செயலாளர்’ பதவி மட்டுமே வழங்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட மற்ற மூத்த தலைவர்களுக்குத் துணை பொதுச்செயலாளர் போன்ற மாநில அளவிலான உயர்பதவிகள் தாராளமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க சி.விஜயபாஸ்கருக்கும் மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், கட்சியின் இந்நடவடிக்கை தங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
