“எல்லாம் ஒரு காரணமாகத்தான் சொல்றேன்”… ஷூட்டிங்கில் பிசி… ரசிகர் வீட்டு விசேஷத்தில் லதா ரஜினி… அரசியல் பேச்சு தாம்பரத்தில் பரபரப்பு…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

தாம்பரத்தில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ரஜினி முருகனின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று மாலை நேரில் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், அவருக்குப் பதிலாக வருகை தந்த லதா ரஜினிகாந்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். விழாவில் அந்த குடும்பத்தினரை வாழ்த்திப் பரிசுகளை வழங்கிய அவர், “என்னை வரவேற்பதற்கு நிறைய செலவு செய்யாதீர்கள், எனது ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும், எல்லாம் ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 2021-ல் ரஜினி அரசியலுக்கு வராதது தமிழகத்திற்குப் பெரிய இழப்பு என்றும், சிங்கப்பூரின் லீ குவான் யூ போல பல நல்ல திட்டங்களை அவர் வைத்திருந்தார் என்றும் லதா ரஜினிகாந்த் வருத்தத்துடன் பகிர்ந்திருந்த நிலையில், தற்போது ரசிகர் வீட்டு நிகழ்வில் அவர் பங்கேற்றது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் உற்று நோக்கப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.

இருப்பினும், லதா ரஜினிகாந்தின் இந்த திடீர் வருகை மற்றும் பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் ஆதரவையும், அதே வேளையில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. 1996 முதல் ரஜினியின் அரசியல் வருகைக்காகக் காத்திருந்து, கோவிட் சூழலால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பலர் தற்போதைய சூழலில் சோர்ந்து போயுள்ளனர். குறிப்பாக, அண்மையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தமிழக முதல்வராகிவிட்ட அரசியல் சூழலில், லதா ரஜினிகாந்தின் இந்த திடீர் ரசிகர் சந்திப்புகள் குறித்து நெட்டிசன்கள் சிலர் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “இத்தனை ஆண்டுகாலம் அமைதியாக இருந்துவிட்டு, ரசிகர்கள் சோர்ந்து போயிருக்கும் இந்த நேரத்தில் திடீரென இதுபோன்ற விசேஷங்களில் கலந்துகொள்வது ஏன்?” என்ற கேள்விகளையும், விமர்சனங்களையும் சமூக வலைத்தளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.