நடிகர் மாரிமுத்து எப்படி பட்டவர்…? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருக்கமான பதிவு…!!

By admin on புரட்டாதி 8, 2023

Spread the love

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமானவர். இவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இணையதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

   

 

   

அந்த பதிவில், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவரது இறப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் நடிகர் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.