Engagement முடிஞ்சிடுச்சு.. காதலரை கரம் பிடிக்கப்போகும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. கியூட் போட்டோஸ்..!

By Mahalakshmi on ஜூலை 21, 2024

Spread the love

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பிரியா ஜெர்சன் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன. அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் சீனியர் என மாறி மாறி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி அதன் மூலமாக ஏகப்பட்ட பாடகர்கள், பாடகிகள் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.

   

   

இந்த நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பலரும் தற்போது பாடகர்களாக இருந்து வருகிறார்கள். எல்லா சீசன்களை போன்று கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 9-வது சீசனும் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் பிரியா ஜெர்சன்.

 

இந்த சீசனில் அருணா என்பவர் டைட்டில் வென்ற நிலையில் முதல் ரன்னரப் பட்டத்தை வென்றவர் தான் பிரியா ஜெர்சன். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் வெளிநாடுகளுக்கு சென்று இசைப் பயிற்சி பெற்றிருக்கின்றார். இவர் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்து இருக்கின்றார்.

இது தொடர்பான அறிவிப்பை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது காதலரோடு எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார் பிரியா ஜெர்சன்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Jerson🌸 (@priya.jerson)