தங்கை மகன் பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஆடி 21, 2024

Spread the love

நடிகர் சிம்பு தனது தங்கை மகன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார். சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வந்து கொண்டிருந்த இவர் இடையில் சறுக்கல்களை சந்தித்தார்.

   

   

காதல் சர்ச்சை, ரெட்கார்ட், உடல் எடை கூடி சரியாக படபிடிப்பிற்கு வராதது என்று பல பிரச்சனைகளை சந்தித்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கின்றார். மாநாடு என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுத்து வருகின்றார்.

 

அந்த வகையில் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் தக்கலைப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் தனது குடும்பத்துடன் அதிக நேரங்களை செலவிடுவார். அதிலும் அக்கா பையனுடன் அதிக விளையாடும் சிம்பு அவரது பிறந்தநாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ELAKKIYA TR (@elakkiya_tr)