நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்ற போது அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் தனது மகனை பாராட்டி சிவகாசி படத்திலிருந்து கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலை பாடினார். இப்போது வரை பலருக்கு விஜயின் அம்மா ஷோபா திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார் என்பது தெரியாது. அந்த பாடல்களின் தொகுப்பு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
விஷ்ணு
எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய விஷ்ணு திரைப்படத்தில் விஜய் சங்கவி இணைந்து நடித்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற தொட்டபெட்டா ரோட்டு மேல என்ற பாடலை சோபா சந்திரசேகர் பாடியுள்ளார். இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
முதல் கனவே
கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீசான முதல் கனவே என்ற படத்தில் இடம்பெற்ற பீர் வேணுமா பிராந்தி வேணுமா என்ற பாடலை ஷோபா சந்திரசேகர் பாடியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
நெஞ்சிருக்கும் வரை
எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரிலீசான நெஞ்சிருக்கும் வரை படத்தில் இடம்பெற்ற அழகான பொண்ணுதான் என்ற பாடலை பாடியவர் ஷோபா சந்திரசேகர். இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
சிவகாசி
பேரரசு இயக்கத்தில் ரிலீசான சிவகாசி திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலை ஷோபா பாடியுள்ளார். இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
வேட்டைக்காரன்
விஜய் அனுஷ்கா நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வேட்டைக்காரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற உன் உச்சி மண்டையில என்ற பாடலின் ஒரு பகுதியை ஷோபா சந்திரசேகர் பாடியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டம் சலாசி பகுதியில் அதிகாலை 4 மணியளவில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும்…
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த தற்போதைய நிலவரம் அரசியல் களத்தில்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த…
மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் (Cooch Behar) மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், அம்மாநில வாக்காளர்…
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த முரளி வேல் என்பவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி வரதலட்சுமி (23). இவர்களுக்குத் திருமணம் முடிந்து…
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நடைபெற்ற இந்த 15 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. …