தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில் அதற்காக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் மாணவர்களை சிறப்பிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது பரிசு வெல்லும் மாணவர்களின் போட்டோவை பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
