Categories: சினிமா

நிஜமாவே மேல இருந்து குதிக்கிறவன்.. அவன் டூப் இல்ல…இவரு தான் டூப்பு – விஜயகாந்தை பங்கமாகக் கலாய்த்த சுந்தர்ராஜன்!

Spread the love

கோவையை சேர்ந்தவர் ஆர். சுந்தர்ராஜன். டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் 80 களில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். இயக்குனர் பாக்யராஜும் இவரும் கல்லூரி தோழர்கள். பயணங்கள் முடிவதில்லை என்ற சில்வர் ஜூப்ளி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சுந்தர்ராஜன்.

அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கி தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

80 களில் விஜயகாந்துக்கு அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் என்றால் அது சுந்தர்ராஜன்தான். விஜயகாந்தின் மார்க்கெட்டை ரஜினி, கமலுக்கு இணையாக உயர்த்தினார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் பொது மேடைகளில் கூட விஜயகாந்தை தாக்கிப் பேசியுள்ளார் சுந்தர்ராஜன்.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சுந்தர் ராஜன் ஒருமுறை  விஜயகாந்தை பங்கமாகக் கலாய்த்துள்ளார். என் கிட்ட மோதாதே என்ற படத்தை சுந்தர்ராஜன் இயக்க விஜயகாந்த் நடித்துள்ளார். அப்போது விஜயகாந்திடம் அடுத்து ஒரு படத்துக்காக சுந்தர்ராஜன் கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் விஜயகாந்தோ தர முடியாது எனக் கூறியுள்ளார்.  இதனால் சுந்தர்ராஜன் கோபமாகியுள்ளார்.

அப்போது உதவி இயக்குனர் ஒருவர் ‘விஜயகாந்தின் டூப் எங்கப்பா?’ எனக் கேட்டுள்ளார். அதற்கு சுந்தர்ராஜன் “டேய் அவன்தான் மேல இருந்து உண்மையாக் குதிக்க போறான். இவரு சும்மா குதிச்ச மாதிரி நடிக்க போறாரு. அவனப் போய் டூப்னு சொல்ற. உண்மையிலயே இவர்தான் டூப்” என விஜயகாந்தைக் கைகாட்டியுள்ளார்.

இதை எழுத்தாளர் ஆர் பி ராஜநாயகம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

22 seconds ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

7 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

10 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

14 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

17 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

21 minutes ago