பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலரும் மூன்று பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 70 வயதிலும் நிற்க நேரமில்லாமல் கமல்ஹாசன் இந்தியன் 2 பட புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாராம். வருகின்ற 8-ஆம் தேதி மட்டும் தான் அவர் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
படம் ரிலீஸ் ஆகும் தேதி வரை ஒவ்வொரு இடங்களிலும் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற உள்ளது. அதில் கமல்ஹாசன் கலந்துகொள்ள விருக்கிரார். இந்த நிலையில் கமல்ஹாசன் இந்தியன் 2 பட தாத்தா வேடத்தில் ரஜினிகாந்த் மற்றும் மற்றொரு நபருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனுக்கும் ரஜினிக்கும் நடுவில் நின்று கொண்டிருக்கும் நபர் யார் என குழம்பி வந்தனர்.
அவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகி சுந்தர்ராஜன். கமல்ஹாசனின் அனைத்து செயல்பாடுகளையும் அவர்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாராம். சொல்லப்போனால் லைக்கா நிறுவனத்திற்கும் கமல்ஹாசனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட போதும் சுந்தர்ராஜன் தான் தலையிட்டு பேசியுள்ளார். இவரை ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். கமல்ஹாசனின் ஆல் இன் ஆல் வேலைகளையும் சுந்தரராஜன் தான் பார்த்துக் கொள்வதாக பிரபல வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.