சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கேப்ரியல்லா செலஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
சின்னத்திரையில் இருந்து கேப்பிரியல்லா செலஸ்க்கு வெள்ளித் துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கேப்ரியல்லா செலஸ்க்கு சுந்தரி சீரியல் பெரும் புகழை தேடி தந்தது. இந்த சீரியல் மூலம் கேப்ரியல்லா பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சுந்தரி சீரியல் கேப்ரெல்லாவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. கிராமத்து பாஷையில் சுந்தரி பேசும் வசனங்கள் அழகாக இருக்கும். சீரியலில் கிராமத்து பெண்ணாக வலம் வந்த சுந்தரி குடும்பப்பாங்கான உடைகளை அணிந்து நடிப்பார்.
இவர் கருப்பாக இருந்தாலும் இவரது தோற்றம் குடும்ப பங்கான முகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரல்லா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார் சமீப காலமாகவே வெளியிடும் புகைப்படங்கள் கிளாமராக உள்ளது. இந்த நிலையில் கேப்ரியல்லா புதிதாக டாட்டூ போட்டுள்ளார். அந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.