MS விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசையைக்கணும் என்ற முடிவை எடுத்தது அவர்தான் –ஏவிஎம் குகன் பகிர்ந்த தகவல்!

By vinoth on புரட்டாதி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய மற்றும்  சினிமாவிலேயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைததுள்ள அவர் இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

தன் சக போட்டியாளர்களின் பாடல்களைக் கூட கேட்க விரும்பாத இளையராஜா, தமிழ் சினிமாவில் தன் சீனியரான எம் எஸ் விஸ்வநாதன் மீது அளவற்ற மரியாதைக் கொண்டவர். அவரின் பல பாடல்களை சிலாகித்து அதில் இருந்து தான் படைப்பூக்கத்தை பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

   

#image_title

   

இந்நிலையில் இளையாராஜா எம் எஸ் விஸ்வநாதனோடு சேர்ந்து நான்கு படங்களுக்கு இணைந்து இசையமைத்துள்ளார் என்பது பலரும் அறியாத தகவல். முதல் முதலாக இருவரும் மோகன், ராதா நடித்த மெல்ல திறந்தது கதவு படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படத்துக்கு மெட்டுக்களை விஸ்வநாதன் உருவாக்க, இசைக்கோர்ப்பு மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா பணிகளை இளையராஜா மேற்கொண்டுள்ளார்.

 

இந்த படத்தைத் தயாரித்த ஏவிஎம் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான ஏவிஎம் குகன் படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “இளையராஜா மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் ஆகிய இரு மாஸ்டர்களையும் ஒரு படத்துக்கு இசையமைக்க வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் என்னுடைய சகோதரர் சரவணன்தான். அவர்தான் இது சம்மந்தமாக இளையராஜாவிடமும் சென்று பேசினார்.

avm saravanan

நாங்கள் கேட்ட போது இளையராஜா உடனே அதற்கு சம்மதித்தார். ஏனென்றால் அவர் எம் எஸ் விஸ்வநாதன் மேல் மரியாதை வைத்திருந்தார். தன்னுடைய குருநாதரைப் போல நினைத்திருந்தார்.” என்று கூறியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகி இன்றளவும் கேட்டு ரசிக்கப்படுபவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.