Categories: சினிமா

ஒரு பக்கம் நயன்தாரா மறுபக்கம் விஷால்… நடுவில் மாட்டிக்கொண்டு டென்ஷன் ஆன சுந்தர் C… அப்படி என்ன நடந்தது தெரியுமா…?

Spread the love

சுந்தர் சி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராவார். 1995ஆம் ஆண்டு முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் C. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பிரபலமானார் சுந்தர் சி.

அதைத்தொடர்ந்து அன்பே சிவம், உள்ளம் கொள்ளை போகுதே, கண்ணன் வருவான், வின்னர், கிரி போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் சுந்தர் C. 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நடிகராக வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார் சுந்தர் C.

இவர் இயக்கிய கலகலப்பு 1, 2 அரண்மனை 1, 2, 3, 4 ஆகிய படத்தொடர்கள் மிகப் பிரபலமானது. சமீபத்தில் பொங்கலுக்கு இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு விஷாலை வைத்து எடுத்த மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மதகஜராஜா வெற்றி பெற்றதால் மறுபடியும் விஷால் உடன் இணைந்து படம் பண்ணலாம் என்று சுந்தர்சி முடிவு செய்திருந்தார். இதற்கிடையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் தொடங்க வேண்டும் என்று ஐசரி கணேஷ் கூறியிருந்தார். ஆனால் நயன்தாரா டேட் தராமல் இழுத்தடித்துள்ளார். ஏப்ரல் மாதம் தான் தேதி தர முடியும் என்று கூறியிருந்தார். சரி அதற்குள் விஷாலை வைத்து படத்தை எடுத்து முடித்து விடலாம் என்று சுந்தர் சி நினைத்திருக்கிறார்.

அந்த புது படத்தில் சுந்தர் C விஷால் இடையே ஏற்கனவே சம்பளம் என்று இல்லாமல் படத்தின் Profit share என்று பேசி வைத்துள்ளனர். ஆனால் தற்போது விஷால் அது எல்லாம் சரி வராது என்று பல்டி அடித்து இருக்கிறார். இதனால் சுந்தர் சி டென்ஷன் ஆகிவிட்டார். ஒரு பக்கம் விஷால் மறுபக்கம் நயன்தாரா இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு டென்ஷன் ஆகி செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறார் சுந்தர் C.

admin

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

1 மணத்தியாலம் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

2 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

2 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

2 மணத்தியாலங்கள் ago