அசிஸ்டென்டா வேலை பார்க்காமலே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்.. உயிர் நண்பன் பாக்யராஜும் ஒரு காரணமாம்..!!

By admin on ஆவணி 18, 2024

Spread the love

80ஸ் காலகட்டத்தில் படம் எடுக்க வேண்டும் என்றால் பிரபல இயக்குனரிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்க்க வேண்டும். ஆனால் யாரிடமும் அசிஸ்டெண்டாக வேலை பார்க்காமல் படம் எடுத்த இயக்குனர் ஒருவர் உள்ளார். அது வேறு யாருமில்லை. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் தான். அவர் யாரிடமும் அசிஸ்டன்ட் ஆக வேலை பார்க்கவில்லை. ஆர்.சுந்தர்ராஜனும் அவரது நெருங்கிய நண்பரும் படம் எடுப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளனர். அவரது நெருங்கிய நண்பனது கையெழுத்து அழகாக இருந்ததால் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

ஆர் சுந்தராஜன் பயோடேட்டா | R. Sundarrajan Biography in Tamil - Filmibeat  Tamil

   

அவர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். ஒருமுறை கோவை தம்பி ஒரு படத்தை இயக்க வேண்டும் என ஆர்.சுந்தர்ராஜனின் நெருங்கிய நண்பரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டாராம். அந்த நேரத்தில் கோவை தம்பி ஆர்.சுந்தர்ராஜனை படம் எடுக்குமாறு கூறியுள்ளார். அப்படி சுந்தர்ராஜன் எடுத்த படம் தான் கடந்த 1982 ஆம் ஆண்டு ரிலீசான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம். இந்த படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்டார் நடித்தனர். பயணங்கள் முடிவதில்லை படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். சுமார் 400 நாட்கள் திரையரங்குகளில் ஓடி படம் சூப்பர் ஹிட் ஆனது.

   

பயணங்கள் முடிவதில்லை: இளைய நிலா பொழிந்த அமரக்காவியம்; மைக் மோகன் உருவாகக்  காரணமாக இருந்த சினிமா! | Payanangal Mudivathillai: Ilaiyaraaja's classical  album uplifted this ...

 

அந்த காலகட்டத்தில் ஆர்.சுந்தர்ராஜனும் அவரது நெருங்கிய நண்பரும் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்துள்ளனர். யாரிடமும் அசிஸ்டெண்டாக வேலை பார்க்காத சுந்தர்ராஜனுக்கு தனக்கு தெரிந்த அனைத்தையும் கற்றுக் கொடுத்தது அவரது நெருங்கிய நண்பர்தான். அது வேறு யாருமில்லை. இயக்குனர் கே.பாக்கியராஜ். பாக்கியராஜும் சுந்தர்ராஜன் இணைந்து தான் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் வந்தனர். இருவரும் இரட்டை இயக்குனர்களாக வலம் வர வேண்டும் என சுந்தர்ராஜன் ஆசைப்பட்டார்.

பாக்யராஜை சும்மா விட கூடாது.. கண்டிப்பா இதை பண்ணனும்.. நடிகர் ஆர்.  சுந்தர்ராஜன் எமோஷனல் | director. Sundarrajan is currently talking about  director Bhagyaraj in an interview ...

ஆனால் அதற்கு முன்னதாகவே பாக்யராஜுக்கு வாய்ப்பு கிடைத்ததால் இருவருமே பிரபல இயக்குனர்களாக மாறினார்கள். பாரதிராஜாவிடம் அசிஸ்டன்ட்டாக வேலை பார்த்த பாக்யராஜும் அவரது நண்பர்களும் சினிமாவில் எப்படி படம் எடுக்க வேண்டும் எந்த மாதிரி யுக்திகளை கையாள வேண்டும் என சுந்தர்ராஜனுக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். அவர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, காலமெல்லாம் காத்திருப்பேன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் பிறந்தநாள் பதிவு - Cinemapluz