15 வருஷத்துல அவர மாதிரி ஒருத்தர.. காமெடி நடிகர் பற்றி பேசிய இயக்குனர் நெல்சன்..!!

By admin on ஆவணி 18, 2024

Spread the love

பிரபல காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான வேட்டை மன்னன் திரைப்படம் நடித்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்தார். ரெடின் கிங்ஸ்லி ஏராளமான படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

கடந்த 2021-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நெற்றிக்கண் திரைப்படத்திலும் டாக்டர் திரைப்படத்திலும் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களிலும் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார். இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் யதார்த்தமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

   

 

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் நடித்த பேட்டியில் கூறியதாவது, ரெடின் கிங்ஸ்லி பார்க்கும்போது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு. அவர பேசுறது, அவரோட பிஹேவியர் கிரேசியா கியூட்டா இருக்கும். நான் என்றாவது படம் எடுத்தா அவரை யூஸ் பண்ணனும்னு அப்பவே நினைச்சிருந்தேன். அப்படித்தான் வேட்டை மன்னன் படம் ஆரம்பிக்கும் போது அவரை தேடி கண்டுபிடித்து நடிக்க வைத்தேன்.

அதன் பிறகு வேட்டை மன்னன் படத்தை கண்டினியூ பண்ண முடியல. அதுல இருந்து பத்து வருஷம் கழிச்சு கோலமாவு கோகிலா படத்துல மீண்டும் அவர் நடிக்க வைத்தேன். ஒரு 15 வருஷத்துல அவர மாதிரி இன்னொரு கேரக்டரை என்னால பாக்கவே முடியல. என்னைக்கா இருந்தாலும் படம் எடுக்கும் போது அவரை மாதிரி ஒரு கேரக்டர் வேணும்னு அவரை கூட்டிட்டு வந்து நடிக்க வச்சிருக்கேன். சில பேர் கூட இருக்கும்போது ஜாலியா இருக்கும் அதுதான் அவர் கூட இருக்கும் போதும் என கூறியுள்ளார்.