அந்த நடிகை மீது தீராத காதல் கொண்ட சுந்தர் C.. திருமணத்திற்கு பிறகு மனைவியிடம் விஷியத்தை உளறியதால் புருஷனுக்கு குஷ்பூ போட்ட அதிரடி கண்டிஷன்..

By admin on மார்கழி 20, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர் சி. நடிகை குஷ்புவின் கணவர் என்பது கூடுதல் தகவல். உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து முறைமாமன், மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கியதால் முன்னணி இயக்குநராக முன்னேறினார். குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் அருணாச்சலம் படம், சுந்தர் சிக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. கமல் நடிப்பில் அன்பே சிவம் படமும் சிறப்பாக பேசப்பட்டது. படம் ஓடாத போதும், திரைக்கதை சிறப்பாக இருந்தது. கமல் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

   

இதைத்தொடர்ந்து பேய் பட இயக்குநராக மாறினார் சுந்தர் சி. அரண்மனை 1,2,3 போன்ற படங்களை இயக்கினார். வரும் பொங்கலுக்கு அரண்மனை 4 ரிலீஸ் ஆகிறது. அவ்வப்போது பேய் படங்களிலும் ஹீரோவாக சுந்தர் சி நடித்தார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் சுந்தர் சி. ஜெய், சிவா, விமல் போன்றவர்களை வைத்து கலகலப்பு, கலகலப்பு 2 போன்ற ஜாலியான படங்களையும் எடுத்தார். பழைய சினிமா படங்களில் இருந்து கதைகளை, காட்சிகளை உருவி அதில் இருந்து கிளைக்கதைகளை உருவாக்கி படம் எடுப்பவர் என்ற பெயர் சுந்தர் சிக்கு உண்டு. இவரது பல காமெடி படங்கள் அப்படித்தான் இருக்கும்.

   

 

சமீபத்திய ஒரு நேர்காணலில் சுந்தர் சி குறித்து பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த போதே சுந்தர் சியை எனக்கு தெரியும். உயரமாக, அழகாக இருப்பார். மென்மையாக பேசுவார். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பாவின் தொடையை காட்டி முன்னுக்கு வந்தார். அவரிடம் பெரிய கிரியேட்டிவிட்டி எல்லாம் ஒன்றும் கிடையாது. ஒருமுறை பத்திரிகையாளர்களிடம் பேசி சுந்தர் சி. குஷ்புவை திருமணம் செய்வதற்கு முன்னால் நான் நடிகை சவுந்தர்யாவை தான் காதலித்தேன்.

அவரை தான் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் அது முடியவில்லை. ஆனால் குஷ்புவிடம் இதை சொன்ன போது, சவுந்தர்யாவை வைத்து நீங்கள் படம் எடுக்க கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கி விட்டார், என்று கூறியிருக்கிறார். மனைவியிடமே தன் காதலை சொல்லும் அளவுக்கு சுந்தர் சிக்கு துளிர் விட்டு போய்விட்டது என, அதில் கிண்டலடித்து இருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.