அருணாச்சலம் படத்தின் திரை அனுபவங்கள் குறித்து சுந்தர்.சி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அருணாச்சலம் படத்திற்கு முதலில் குபேரன் என டைட்டில் வைத்தோம். ரஜினி படம் என்றாலே டைட்டிலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் எப்படியோ குபேரன் டைட்டில் கசிந்து விட்டது. இதனால் டைட்டிலை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு வந்தோம். நானும் ரஜினி சாரும் ரொம்ப நாள் படத்தின் டைட்டில் குறித்து விவாதித்தோம். ஒரு நாள் ஒரு டைட்டிலை தேடி பிடித்து விட்டேன் என கூறி ரஜினி சார் வீட்டிற்கு என்னை அழைத்தார்.
அப்போது ரஜினி சாருக்கு நெருக்கமான ஒருவர் அருணாச்சலம் என படத்தின் டைட்டிலை யோசித்து இருப்பதாக கூறினார். எனக்கு அந்த டைட்டில் சுத்தமாக பிடிக்கவில்லை. ரஜினி சார் கூறினாலும் அந்த டைட்டில் வேண்டாம் என கூற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு தான் அங்கு சென்றேன். ஆனால் ரஜினி சார் அருணாச்சலம் என்று அவர் ஸ்டைலில் சொன்னதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் சொல்லும் போது அந்த டைட்டில் சூப்பராக இருந்தது. ரஜினி சார் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அபூர்வம் என கூறியுள்ளார்.
