சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது புதிய சீரியல்களை களம் இறக்கி மக்களை ஈர்க்கிறது. இந்த நிலையில் சன் டிவியில் மக்களை அதிகம் கவர்ந்த சீரியல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலாவதாக இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மல்லி சீரியல் 20 எபிசோடுகளை கடந்தது.

இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ஆறாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடிகை ஸ்ருதிகா கதாநாயகியாகவும் நடிக்கும் சீரியல் லட்சுமி. அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணை சீரியல் போலவே கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகும் அனாமிகா சீரியல். பணக்கார பெண்ணான அனாமிகா, தொழிலதிபரான ரிஷி, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நந்தா ஆகியோருக்கு இடையே நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து சீரியல் நகர்கிறது.

இது ஒரு திரில்லர் கதையாக அமைந்துள்ளது. ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டது. முன்னதாக எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றது. ஆனால் சில காரணங்களால் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. ஆரம்பித்த சில நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் அசைக்க முடியாத இடத்தை எதிர்நீச்சல் சீரியல் பிடித்தது.

அதேபோல மருமகள் சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கஞ்சத்தனமாக இருக்கும் பிரபுவுக்கும் தாராள மனதை கொண்ட ஆதரைக்கும் இடையே இருக்கும் காதல் கதை தான் மருமகள் சீரியல். அடுத்ததாக அன்பே வா சீரியலில் ஹீரோயினாக நடித்த டெல்னாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் இரண்டாம் பாகத்தில் நடித்த ஹீரோவும் இணைந்து ஆடுகளம் என்ற சீரியலில் நடித்துள்ளனர். இந்த சீரியலும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

