சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.

அதன்படி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய முக்கியமான சீரியல்கள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வரும் நிலையில் இனியா சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. சுமார் இரண்டு வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைக்காததால் விரைவில் முடிக்க போகிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே மிஸ்டர் மனைவி என்ற சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இதுதான் முதலில் முடிப்பதற்கு சன் டிவி சேனல் முடிவெடுத்துள்ளது.

இருந்தாலும் இதற்கு இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் கூடி வராத காரணத்தால் முதலில் இனியா சீரியலை முடித்துவிட்டு அதன் பிறகு இந்த சீரியலை முடிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். இதற்கு அடுத்ததாக சுந்தரி சீரியலும் முடியவில்லை.

சுந்தரி மற்றும் வெற்றியின் திருமணம் நடந்த பிறகு அத்துடன் சுபம் போட்டு விட வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மலர் சீரியல் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

அடுத்ததாக ஈஸ்வரி மற்றும் அழகு சுந்தரத்தின் நடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மக்களை கவர்ந்த ஆனந்த ராகம் சீரியலும் இந்த வருடத்திற்குள் முடித்துவிட்டு புத்தம் புதிய சீரியல்களை ஒவ்வொன்றாக சன் டிவி களமிறக்க காத்திருக்கிறது. இதற்கு மற்றொரு காரணமும் என்னவென்றால் சன் டிவியுடன் போட்டி போட்டு விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் நெருங்கி வருவதால் பழைய சீரியல்கள் அனைத்தையும் ஓரம் கட்டி வருகின்றது.

மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தப் போகிறார் என்பதால் மக்கள் அனைவரும் அந்த பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக அவர்களுடைய கவனத்தை சன் டிவி பக்கம் ஈர்க்க புத்தம் புது சீரியல்களை விரைவில் கொண்டு வரவுள்ளது.
