இந்தியாவே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் செய்தி திருப்பதி லட்டுவை பற்றி தான். இந்தியாவில் மிக முக்கியமான கோவிலும் கடவுளுமாக கருதப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோவிலாகும். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலக அளவில் பிரபலமானது.
இந்து கடவுள் ஆன பெருமாளுக்கு பூஜை புனஸ்காரங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. அப்படி தான் திருப்பதியில் லட்டும் செய்யப்பட்டிருந்தது. தற்போது திருப்பதி லட்டில் தான் புதிய பிரச்சினை ஆரம்பித்துள்ளது. அது என்னவென்றால் திருப்பதி லட்டு செய்ய தயாரிக்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது என்ற புகார் சந்திரபாபு நாயுடு கூறியதுதான். இதையாடுத்து பெரிய பூகம்பமே வெடித்தது.
எப்படி ஒரு இந்து கடவுளுக்கு அசைவம் கலந்து பிரசாதம் படைக்கலாம் இது கோவிலின் புனித தன்மையை கெடுத்து விட்டது என்று அனைவரும் பொங்கினார்கள். என்னதான் நெய்யை கோவிலுக்கு கொடுக்கும் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் ஒருபுறம் இது தீயாய் பரவி வருகிறது. கோவிலை சுத்தப்படுத்தும் பணிகளும் யாகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த லட்டு சர்ச்சை புதிய ஒரு பிரச்சனையை இன்று கொண்டு வந்திருக்கிறது.
அது என்னவென்றால் திருப்பதியில் லட்டு வாங்கிய பக்தர் ஒருவர் திருப்பதி லட்டில் குட்கா கவர் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். என்னடா இது மறுபடியும் திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை என்று பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. இதை எப்படி சமாளிப்பார்கள் என்ன முடிவு வரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.