விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் சீரியல்.. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..!

By Nanthini on செப்டம்பர் 20, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் அதில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

   

குழந்தை பிறந்த சமயத்தில் சற்று சீரியலை விட்டு விலகினாலும் மீண்டும் என்ட்ரி கொடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் அவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடிக்கின்றார்.சன் டிவியில் ஆலியா மானசா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஆல்யா மானசா நடித்து வருகின்றார்.

   

 

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த ஆண்டு வரை டி ஆர்பியில் சக்கை போடு போட்டு வந்த இனியா சீரியல் கடந்த சில மாதங்களாகவே டாப் 10 பட்டியலில் இடம் பிடிக்காததால் அதனை தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் இனியா சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

author avatar
Nanthini