அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழரசன் பச்சமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருகிறது. இந்த நிலையில் விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது, இது ஒரு பீரியாடிக் படமாக தொடங்குகிறது. பீரியாடிக் படம் என ரப்பர் பந்தின் விலை ரூபாய் 15 ல் இருப்பதிலிருந்து காட்டப்படுகிறது. அட்டகத்தி தினேஷ் முதலில் அறிமுகம் செய்கிறார்கள்.
அட்டகத்தி தினேஷ் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரராக இருக்கிறார். இவரது விக்கெட்டினை இப்படி பந்து வீசினால் விழித்து விட முடியும் என சிறுவயதில் கண்டுபிடித்து சொல்கிறார் ஹரிஷ் கல்யாண். நிகழ்கால கதையில் ரப்பர் பந்தின் விலை 35 ஆக உள்ளது. அதனை வைத்து படம் நிகழ்காலத்தில் தான் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். கிரிக்கெட் வீரராக மட்டுமில்லாமல் சாதி மறுப்பு திருமணம் செய்தவராகவும் உள்ளார். கிரிக்கெட் விளையாட்டால் தினேஷுக்கும் ஹரிஷ் கல்யாநுக்கும் மோதல் ஏற்பட்டு சண்டை வருகிறது.
தான் காதலிக்கும் பெண்ணின் அப்பா தான் தினேஷ் என தெரியாமல் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து அவருடன் சண்டை போடுகிறார். அந்த காதல் கைகூடியதா இல்லை பிரச்சனைகள் ஏற்பட்டதா அந்த கிரிக்கெட்டில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் மீதி கதை. சில மணி நேரத்தில் சாதி சண்டையை காட்டுகின்றனர். அதை பார்க்கும்போது இனி அவ்வளவுதான் சாதி ஒழிப்பு பாடம் நடத்த போகிறார்கள் என பயத்தோடு படத்தை பார்த்தேன்.
ஆனால் அப்படி இல்லாமல் சுவாரஸ்யமான கிரிக்கெட் காட்சிகள் குடும்ப சண்டை என முதல் பாதி அட்டகாசமாக உள்ளது. இரண்டாவது பாதியும் சிறப்பாக தான் உள்ளது. இந்த மாதிரி படங்கள் ரிலீஸ் ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஒரு ஹீரோவுக்கும் இன்னொரு ஹீரோக்கும் இடையே உள்ள மோதலை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறார்கள். சாதிய சமத்துவத்தை பற்றி பேசுகிற படமாக ரசிக்கும்படியான காட்சிகள் அமைத்து இருக்கிறது குடும்பத்துடன் பார்ப்பதற்கு லப்பார் பந்து சிறப்பான திரைப்படம் என புளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.