இந்த வாரம் TRP- யில் கெத்து காட்டிய சன் டிவி… பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி…!

By Nanthini on பங்குனி 1, 2025

Spread the love

கடந்த பல மாதங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் தொடர்ச்சியாக டிஆர்பி ரேட்ங்கில் முன்னிலை வகிக்க போராடி வருகிறது. சில வருடங்களாகவே டிஆர்பியில் சன் டிவியுடன் விஜய் டிவி தொடர்கள் மோதி வந்தது. ஆனால் இந்த இடத்தை கடந்த சில மாதங்களில் மொத்தமாக விஜய் டிவி இழந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக சன் டிவி டாப் ஐந்து இடங்களை தொடர்ச்சியாக தன்னுடன் தக்க வைத்து வருகின்றது. அதன்படி இந்த வாரம் டிஆர்பி அப்டேட்டில் முதல் நான்கு இடங்களை சன் டிவி பிடித்துள்ளது.

வார்டன் பேசிய விஷயம்..போராட துணிந்த ஆனந்தி..சிங்க பெண்ணே லேட்டஸ்ட் அப்டேட்..! - warden encourages anandhi singapenne seriyal episode preview - Samayam Tamil

   

சிங்க பெண்ணே:

   

காதலை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே தொடர் அதிரடி திருப்பங்களை தற்போது சந்தித்து வரும் நிலையில் இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி? - தமிழ் News - IndiaGlitz.com

மூன்று முடிச்சு:

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்ட இந்த மூன்று முடிச்சு சீரியல் டிஆர்பிஎல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ விக்ரம் கொஞ்சம் கொஞ்சமாவது மாறி வருவதால் சீரியல் மேலும் பல அதிரடிகளை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு நாட்டு பாடலுக்கு நாட்டுக்குத்து குத்திய கயல் சீரியல் நடிகை! வைரலாகும் வீடியோக்காட்சி - மனிதன்

கயல்:

மூன்றாம் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. நாயகியான கையில் தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்தித்து வருவதால் இந்த சீரியல் தன்னுடைய முதல் இடத்தை தொடர்ச்சியாக இழந்து வருகின்றது.

Marumagal serial: அடித்து துவம்சம் செய்த ஆதிரை.. கதிகலங்கி போன பிரபு.. அதிர்ச்சியில் குடும்பம்.. மருமகள் சீரியலில் இன்று

மருமகள்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. ரசிகர்களுக்கு அதிருப்தி கொடுக்கும் கதைக்களமாக நகர்ந்து வருவதால் டாப் மூன்று இடங்களை இந்த சீரியல் இழந்துள்ளது.

Siragadikka Aasai | 11th to 13th July 2024 - Promo

சிறகடிக்க ஆசை:

முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்த நிலையில் ஐந்தாவது இடத்தை விஜய் டிவியின் சிறக்கடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஐந்தாவது இடத்தை தக்கவைத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் சன் டிவியின் அண்ணன் சீரியல் இடம் பிடித்துள்ள நிலையில் அடுத்ததாக ஏழாவது இடத்தை எதிர்நீச்சல் 2 சீரியல் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்பதாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் பத்தாவது இடத்தில் ராமாயணம் சீரியலும் இடம் பிடித்துள்ளது.